தித்திக்கும் பொங்கல் தின வாழ்த்துக்கள்
கால ஓட்டத்தில் கலந்திடுக்கும் எம் இனத்தின் வடுக்களை களைந்து ஈழ தேசத்தின் விடுதலைக்காய் நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு உழைத்திடும் புதிய ஆண்டாக, காலமாக இன்று முதல் புதிய அத்தியாயம் ஒன்று உருவாகட்டும்.
சுயத்தின் பிரதிபலிப்புக்களுக்கு அப்பால் சுதந்திரப் போரில் சாவடைந்த மக்களையும் அந்த மக்களுக்காகவும் எமக்காகவும் களத்தில் வித்தான மாவீரர்களின் கனவுகளை நிஜமாக்க வேண்டும் என்ற உறுதியுடன் அனைவரும் செயற்ப்படுவோம்...
மீட்சி பெறும் ஈழத்திற்கான எதிர் பார்போடு
வன்னித்தென்றல் இணையம்
முற்றம் வா தை மகளே முன்பிருந்த நிலை தா
கார்காலக்கனவுகளுக்குள்
கருநாகம் புகுந்தது
ஏர் பூட்டி உழத நிலமெலாம்
எரி யூட்டும் பிணங்களால்
நிறைக்கப்பட்டது...!
காலார நடந்த தேசம்
மனதார சென்ற கோயில்
மந்தாரமிடும் வனப்பு
ஓடி விளையாடிய வரம்பு
பாடித்திரிந்த பள்ளிகள்...!
இலங்கை அரசியலை தீர்மாணிக்கும் சக்தி தமிழ் பேசும் சமூகத்திடம்.
நடைபெறவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில் பிரதான கட்சிகளைச்சேர்ந்த இரு வேற்பாளர்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவிவருகின்றமை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனாலும் தற்போதய சூள்நிலையில் அவை மேலும் வலுப்பெற்றுள்ளன. சிறுபிள்ளைக்கு டொபியை கொடுத்து சாப்பாடு ஊட்டுவதுபோல் கட்சி மாறுபவர்களுக்கெல்லாம் அமைச்சு பதவிகொடுத்து தம் கட்சிக்குள் உள்ளிலுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ச ஒருபுறமும்இ எதுகேட்டாலும் தருகிறேன். பதவிஏற்றவுடன் நீங்கள் கேட்கும் அமைச்சை உடனே தருகிறேன்.
|
|









